6 வது இடத்துக்கு முன்னேறிய சிஎஸ்கே! முழு பட்டியல் இதோ!

உலகம் முழுவதும் கொரோனா அதிதீவிரமாக பரவி வரும் நிலையிலும் கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களை குஷிப்படுத்தவும், பொருளாதார இழப்பை ஈடுகட்டவும் அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் ஆட்டத்தில் கண்ட வெற்றிக்குப் பிறகு தொடா்ந்து 3 தோல்விகளை சந்தித்துள்ளது. அதற்கடுத்த ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளது. சென்னை அணியின் ஷேன் வாட்சன் ஆட்ட நாயகன் பரிசை தட்டி சென்றார். இதன் மூலம் பட்டியலில் 6வது இடத்தை பிடித்துக் கொண்டுள்ளது சிஎஸ்கே அணி. இதுவரை நடந்த ஆட்டங்களில் எடுத்துள்ள புள்ளிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,
புள்ளிகள் பட்டியல்
அணிகள் ஆட்டங்கள் வெற்றி தோல்வி புள்ளிகள் நெட் ரன்ரேட்
மும்பை 5 3 2 6 +1.214
தில்லி 4 3 1 6 +0.588
பெங்களூர் 4 3 1 6 -0.954
கொல்கத்தா 4 2 2 4 -0.121
ராஜஸ்தான் 4 2 2 4 -0.317
சென்னை 5 2 3 4 -0.342
ஹைதராபாத் 5 2 3 4 -0.417
பஞ்சாப் 5 1 4 2 +0.178