CSK ரசிகர்களுக்காக விசில் போடு எக்ஸ்பிரஸ்..!!
சென்னையில் இன்று 30-ம் தேதி சிஎஸ்கே- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதும் போட்டியை இலவசமாக காண குமரி முதல் சென்னை வரை விசில் போடு எக்ஸ்பிரஸ் இய்யாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது . குமரி, நெல்லை, மதுரை, திண்டுக்கல், திருச்சியை சேர்ந்த 750 ரசிகர்களுக்கான அனைத்து செலவும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியை காண்பதற்காக 750 ரசிகர்கள் கொண்ட விசில் போடு எக்ஸ்பிரஸ் இன்று காலை சென்னை வந்தடைந்தது. இந்த ரயிலில் வந்த ரசிகர்கள் விசில் அடித்து சிஎஸ்கே குறித்த கரகோஷத்தையும் எழுப்பி வந்தனர். இந்த 750 ரசிகர்களும் இன்று சென்னை பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியை நேரில் காண உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இதற்காக ஏப்ரல் 14-ம் தேதி முதல் www.chennaisuperkings.com/wgistlepoduexpress/#/ என்ற இணையதளத்தில் ரசிகர்கள் பதிவு செய்யலாம் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி பதிவு செய்திருந்த சிஎஸ்கே ரசிகர்களை ஏற்றிக்கொண்டு நேற்று கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்ட ரயில் இன்று காலை சென்னை வந்தடைந்திருக்கிறது.