1. Home
  2. தமிழ்நாடு

கதற... கதற...ரூ.100 கோடி வசூல் செய்த 'டிராகன்' படம்..!

Q

கடந்த 21-ந் தேதி திரையரங்குகளில் வெளியான டிராகன் படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் விஜே சித்து, ஹர்ஷத், சினேகா மற்றும் பிரபல இயக்குனர்களான மிஷ்கின் , கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கதாநாயகிகளாக அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோகர் ஆகிய இருவரும் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு பெருகி வருவதால் கூடுதல் திரையரங்குகளும் ஒதுக்கப்பட்டுள்ளதால், இந்த படத்தைக் காண ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரண்டு வருகின்றனர். இப்படம் முதல் நாளில் இருந்தே வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. முதல் வாரத்தில் உலக அளவில் ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது.
இந்த நிலையில், படம் வெளியாகி 9 நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


 

Trending News

Latest News

You May Like