அப்பாவின் 2ஆவது திருமணத்தை தடுக்க முயன்ற மகனுக்கு நேர்ந்த கொடூரம் !

குஜராத் மாநிலம் அகமதாபாத் தரியபூர் பகுதியை சேர்ந்தவர் நயிமுதின் ஷேக் (50). இவரது மகன் யாஹ்யா ஷேக்.
குடும்ப பிரச்னை காரணமாக மகன் ஷேக் தனது தாயார் ஜுபேதாபானு ஆகியோர் ரயிமுதினுடன் இருந்து பிரிந்து அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனியாக வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மகன், மனைவி பிரிந்து சென்றதால் நயிமுதின் ஷேக் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. இதற்கு மகன் யாஹ்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த நயிமுதின் மகன் வீட்டிற்கு சென்று அவரை கடுமையாக தாக்கியுள்ளார். மகனை தாக்கும்போது தடுக்க வந்த தாய் ஜுபேதாபானைவையும் நயிமுதின் ஷேக் தாக்க முயன்றுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த யாஹ்யா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in