9 நாள் பெண் குழந்தையை விற்ற கொடூர தாய் !
பிறந்த 9 நாட்களே ஆன பெண் குழந்தையை கல் நெஞ்சக்கார தாய் 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் சம்பல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவர் தனக்கு பிறந்த பெண் குழந்தையை விற்றுவிட்டதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அந்தப் பெண்ணின் வீட்டிற்குச் சென்று விசாரணை நடத்திய போது அவர் குழந்தையை விற்றது தெரியவந்தது. பொதுமுடக்கம் காரணமாக வேலை இல்லாமல் இருந்த அவர் குழந்தையை விற்று இருக்கிறார். அவருக்கும் ஏற்கனவே ஐந்து குழந்தைகள் இருப்பதும், அவரது கணவர் அவரை விட்டு சென்றுவிட்டதும் தெரியவந்துள்ளது.
குழந்தையை வாங்கிச் சென்ற குடும்பத்திடம் விசாரணை நடத்திய போது அவர்களிடம் குழந்தை இருப்பது தெரியவந்திருக்கிறது. அவர்களிடம் சட்டப்பூர்வமான ஆவணங்கள் எதுவும் இல்லாததால் குழந்தையை கைப்பற்றிய அதிகாரிகள் மாவட்ட குழந்தைகள் நலவாரியத்தில் குழந்தையை ஒப்படைத்தனர்.
குழந்தையை விற்ற மற்றும் வாங்கியக் குற்றத்திற்காக குழந்தையின் தாய் மற்றும் அந்தத் தம்பதியினரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
newstm.in