கள்ளக்காதலை கண்டித்த 6 வயது மகனை கொன்ற கொடூர தாய்!

தாய் வேறொரு நபருடன் பழகுவது தெரிந்து அதை கண்டித்த சிறுவனை அப்பெண்ணும், கள்ளக்காதலனும் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் பனாஸ் காந்தா மாவட்டம் மெஹமத்பூர் கிராமத்தில் ராஜுல் (26) என்ற பெண்ணுக்கு சஞ்சய் என்பருவடன் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இதனால் அப்பெண் கள்ளக்காதலனுடன் தொடர்ந்து உல்லாசமாக இருந்துள்ளார். இந்த விஷயம் ராஜுலின் ஆறு வயது மகன் ஜெகதீஷ்க்கு தெரிந்துவிட்டது.
இருவரும் உல்லாசமாக இருப்பதை சிறுவன் பார்த்துவிட்டான். அதை அறிந்த தாய் நடந்த விஷயத்தை தந்தையிடம் சொல்லக்கூடாது என மிரட்டியுள்ளார். ஆனால் அந்த சிறுவன் நடந்த விஷயத்தை தந்தையிடம் கூறிவிட்டார்.
அதனால் பெண்ணின் கணவன் அவரை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் கள்ளக் காதலனோடு சேர்ந்து தனது ஆறு வயது மகனை கொலை செய்து அருகிலுள்ள ஆற்றங்கரையில் பிணத்தை தூக்கி வீசிவிட்டார்.
சிறுவனின் பார்த்த மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விசாரணையில் சிறுவன் ஜெகதீஷ் குறித்தும், அவனது குடும்பம் குறித்து தெரியவந்தது. கள்ளக்காதல் விவகாரத்தில் சிறுவனின் தாயே கொலை செய்ததை போலீஸார் கண்டுபிடித்தனர். அதனைத் தொடர்ந்து ராஜுல் மற்றும் அவரது கள்ளக்காதலனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
newstm.in