1. Home
  2. தமிழ்நாடு

நிதானத்தை இழந்த ரொனால்டோ... ஒரு போட்டியில் விளையாட தடை..!

1

சவுதி ப்ரோ லீக் தொடல் அல் சஹாப் அணியை எதிர்த்து அல் நஸர் அணி விளையாடியது. தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 21வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படித்தி நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் கோலை அடித்து அசத்தினார். இதையடுத்து மீண்டும் அல் நஸர் அணி முதல் பாதியின் கூடுதல் நிமிடத்தில் மற்றொரு கோல் அடிக்க, அந்த அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இதற்கு பதிலடியாக அல் சஹாப் அணியின் யானிக் முதல் கோல் அடித்து பதிலடி கொடுத்தார். இதனால் ஆட்டம் பரபரப்பானது. தொடர்ந்து இரண்டாம் பாதியில் கார்லோஸ் ஒரு கோலை அடிக்க, ஆட்டம் 2-2 என்ற கணக்கில் சமநிலை ஏற்பட்டது. பின்னர் அல் நஸர் அணியின் தலிஸ்கா மீண்டும் ஒரு கோல் அடித்து அசத்தினார். இதன் மூலம் 3-2 என்ற கணக்கில் அல் நஸர் அணி வெற்றியை பெற்றது.

இந்த போட்டியின் இடையே மைதானத்தில் இருந்த ரசிகர்கள் பலரும் ரொனால்டோவை வம்புக்கு இழுக்கும் வகையில் மெஸ்ஸி-யின் பெயரை கூறி வம்புக்கு இழுக்க தொடங்கினர். ஒரு கட்டத்தில் ரொனால்டோ கோபமடைய, அந்த கோஷத்தை காதுல் கேட்கிறது என்று செய்கை காட்டியதோடு பிறப்பு உறுப்பை காட்டி ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்தார். இந்த போட்டியின் நேரலையின் போது இந்த காட்சிகள் வெளியாகவில்லை.

ஆனால் ரொனால்டோவின் செயல்களை செல்ஃபோன் மூலமாக வீடியோ எடுத்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு ட்ரெண்ட் செய்தனர். இதையடுத்து சவுதி ப்ரோ லீக் நிர்வாகம் தரப்பில் ரொனால்டோ மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு போட்டியில் விளையாட ரொனால்டோவுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், ரூ.2.21 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.


 

Trending News

Latest News

You May Like