கிரிக்கெட் வீரர் விராட் கோலி புதிய சாதனை..!
தற்போது இன்டர்நெட் என்றாலே கூகுள் என்று அனைவரும் கருதும் அளவிற்கு மக்களுக்கு தேவைப்படும் அனைத்து தகவல்களையும் விரல் நுனியில் கொண்டு வந்து கொடுக்கிறது. இந்நிலையில் கடந்த 25 வருடங்களில் அதிகமாக மக்களால் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர் பற்றி கூகுள் நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின் படி இந்தியாவை சேர்ந்த நட்சத்திர வீரர் விராட் கோலி கடந்த 25 வருடங்களில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட்டராக சாதனை படைத்துள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
விராட் கோலி கடந்த 15 வருடங்களாக 3 வகையான கிரிக்கெட்டிலும் மிகச்சிறப்பாக விளையாடி 80 சதங்களை விளாசி இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக்கொடுத்து வருகிறார். அதேபோல ஐபிஎல் தொடரிலும் அதிக ரன்கள் குவித்த வீரராக சாதனை படைத்து வரும் அவர் நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவானாக செயல்பட்டு வருகிறார். அதனால் இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் விராட் கோலிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இருப்பினும் கடந்த 25 வருடத்தில் டோனி, சச்சின் தெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், முரளிதரன், வார்னே போன்ற சிறந்த வீரர்களை காட்டிலும் அதிகமாக இணையத்தில் தேடப்பட்ட வீரராக சாதனை படைத்துள்ளது விராட் கோலியின் கேரியரில் மற்றுமொரு பெருமையாக பார்க்கப்படுகிறது.