1. Home
  2. தமிழ்நாடு

எம்.பி.,யை கரம்பிடிக்கிறார் கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்..!

Q

உ.பி., மாநிலம் அலிகர் நகரை சேர்ந்தவர் ரிங்கு சிங். இடது கை பேட்ஸ்மேனான இவர், கடந்த 2023 ஆக. மாதம், அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகம் ஆனார். ஐ.பி.எல்., தொடரில் கோல்கட்டா அணிக்காக விளையாடி வருகிறார். டி-20 தொடரில் உலக கோப்பை வென்ற இந்திய அணியில் இவர் இடம்பெற்றிருந்தார். வரும் 22ம் தேதி இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்.

தற்போது, 27 வயதாகும் இவர், சமாஜ்வாதி கட்சி எம்.பி., பிரியா சரோஜ் என்பவரை திருமணம் செய்ய உள்ளார். இதற்காக நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. திருமணம் எப்போது என்ற தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

பிரியா சரோஜ், வாரணாசியை சேர்ந்தவர். உ.பி.,யின் மச்லீஸ்வர் தொகுதியில் சமாஜ்வாதி சார்பில் தேர்வு செய்யப்பட்டவர். 25 வயதில் வெற்றி பெற்ற இவர், லோக்சபாவில் இளம் வயது எம்.பி.,க்களில் ஒருவர் என்ற பெருமை பெற்றுள்ளார். சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.

Trending News

Latest News

You May Like