1. Home
  2. தமிழ்நாடு

தெரு நாயிடம் கடி வாங்கி 12 முறை தடுப்பூசி போட்ட கிரிக்கெட் வீரர் !! 90 வயதில் மரணம்..

தெரு நாயிடம் கடி வாங்கி 12 முறை தடுப்பூசி போட்ட கிரிக்கெட் வீரர் !! 90 வயதில் மரணம்..


கடந்த 1955-ம் ஆண்டு இந்தியாவுக்கு நியூஸிலாந்து அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் விளையாட வந்திருந்தது. சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் டெஸ்ட் போட்டி நடந்தது.

தெரு நாயிடம் கடி வாங்கி 12 முறை தடுப்பூசி போட்ட கிரிக்கெட் வீரர் !! 90 வயதில் மரணம்..

அப்போது நியூஸிலாந்து அணியில் மாட் பூர் இடம் பெற்றிருந்தார். மாட் பூரே மட்டுமல்லாமல் அவரின் குடும்பத்தார் அனைவருமே நாய் மீது அளவற்ற அன்பு செலுத்தக் கூடியவர்கள். பெங்களூருவில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது நியூஸிலாந்து அணி பீல்டிங் செய்து கொண்டிருந்தது.

அப்போது திடீரென மைதானத்துக்குள் ஒரு தெருநாய் புகுந்தது. அந்த நாயைப் பார்த்த மாட் பூர், நாயின் மீதான பாசத்தால் அதை விரட்டிப் பிடிக்க ஓடினார். ஆனால், நாயோ தன்னை அடிக்க வருகிறார்கள் என நினைத்து ஓடியது.

எப்படியோ நாயைக் காட்டிலும் வேகமாக ஓடி அதைப் பிடித்த மாட் பூரை நாய் கடித்து விட்டுத் தப்பி ஓடியது. உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டு, தடுப்பூசி போடப்பட்டது.

ஆனால், அதன்பின் அந்த நாயைக் கண்காணித்தபோது, அந்த நாய்க்கு ரேபிஸ் நோய் தாக்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு 12 தடுப்பூசிகள் வயிற்றில் போடப்பட்டன. தற்போது வயது மூப்பு காரணமாக இன்று மாட் பூர் (90) காலமானார்.

Newstm.in

Trending News

Latest News

You May Like