1. Home
  2. தமிழ்நாடு

பிரபல கட்சியில் சேர்ந்த 10 நாட்களில் விலகுவதாக அறிவித்த கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு!

1

ஆந்திராவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் அம்பாதி ராயுடு கடந்த சில வருடங்களாக, சென்னை அணிக்காக ஐபிஎல் தொடரில் ஆடி வந்தார். கடந்த வருடம் சென்னை அணி ஐபிஎல் தொடரை வென்ற கையோடு, தான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ராயுடு அறிவித்தார்.சிஎஸ்கே ஐபிஎல் 2023 கோப்பையை வென்று ராயுடுவுக்கு ஒரு அருமையான பிரியாவிடை பரிசை அளித்தது.

ராயுடுவின் அடுத்தகட்ட திட்டம் என்னவாக இருக்கும்? என அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் போது, கடந்த டிசம்பர் 28-ம் தேதி ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி முன்னிலையில், ஒய்எஸ்ஆர்சிபி கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டதாக அறிவித்தார்.கிரிக்கெட் வீரர்கள் தங்கள் ஓய்வுக்குப் பிறகு அரசியலில் ஈடுபடுவது புதிதல்ல. முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான நவ்ஜோத் சிங் சித்து, பஞ்சாப் அரசியலில் முக்கியமான நபர். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், கவுதம் கம்பீர், முகமது அசாருதீன் என பலரை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.

இந்த நிலையில் இன்று (ஜனவரி 6) யாரும் எதிர்பாராவிதமாக, அரசியலில் இருந்து தான் விலகுவதாக ராயுடு தன்னுடைய எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், ஒய்எஸ்ஆர்சிபி கட்சியில் இருந்தும், அரசியலில் இருந்தும் சிறிது காலம் விலகி இருக்க விரும்புகிறேன் என்பதை அனைவருக்கும் தெரிவித்து கொள்கிறேன். இதுகுறித்த என்னுடைய அடுத்தகட்ட நடவடிக்கை  உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் அரசியலில் சேர்ந்து பத்து நாட்கள் முடிவதற்குள் இப்படி ஒரு முடிவா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.


 

Trending News

Latest News

You May Like