1. Home
  2. தமிழ்நாடு

நாளை அகமதாபாத்தில் கோலாகலமாக தொடங்கவுள்ள உலக கோப்பை கிரிக்கெட் தொடக்க விழா..!

1

உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடர் வரும் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவில் 10 நகரங்களில் நடைபெற உள்ளது. இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உளபட 10 அணிகள் பங்கேற்கின்றன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதும். இதில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

வரும் 5-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் வரும் 4-ம்தேதி அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடக்க விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. அன்று மாலை 7 மணிக்கு தொடங்கும் பிரமாண்ட தொடக்க விழாவில் இந்திய பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் லேசர் ஷோ மற்றும் வாணவேடிக்கைகள் நடைபெறும். பாலிவுட் நட்சத்திரங்களின் நடன நிகழ்ச்சி நடைபெற பெற உள்ளது.

நடிகர் ரன்வீர்சிங், தமன்னாவின் நடன நிகழ்ச்சி, ஆஷா போஸ்லே, ஸ்ரேயா கோஷல், அரிஜித் சிங், சங்கர் மகாதேவன் ஆகியோர் பாடல்கள் பாடி ரசிகர்களை மகிழ்விக்க உள்ளனர். மேலும் 10 அணி கேப்டன்கள் அறிமுக நிகழ்ச்சியும் நடக்கிறது. 5-ம் தேதி இங்கிலாந்து-நியூசிலாந்து போட்டிக்கு டிக்கெட் எடுத்துள்ள ரசிகர்கள் இந்த தொடக்கவிழாவில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். மேடை உள்பட தொடக்க விழாவிற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ஒத்திகை நிகழ்ச்சியுடன் அரங்கேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like