1. Home
  2. தமிழ்நாடு

கிரிக்கெட்டில் ஒரே பந்தில் 286 ரன்கள் எடுத்த சாதனை நிகழ்வு!

கிரிக்கெட்டில் ஒரே பந்தில் 286 ரன்கள் எடுத்த சாதனை நிகழ்வு!


கிரிக்கெட்டில் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருந்தாலும் ஒரே பந்தில் 286 ரன்கள் ஓடி எடுத்த சுவாரஸ்ய சாதனை இன்றும் மறக்க முடியாததாக உள்ளது.

1894ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. ஆஸ்திரேலியா மற்றும் விக்டோரியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் தான் இந்த சுவாரஸ்ய நிகழ்ந்து நடந்துள்ளது.

போட்டியில் முதலில் களமிறங்கிய விக்டோரியா எதிர்கொண்ட முதல்பந்தை தூக்கி அடித்ததில் அத பந்து மைதானத்திலிருந்த மரத்தின் கிளைகளில் சிக்கி கொண்டது.

பந்து மரத்தில் சிக்கியதை தொடர்ந்து தொடக்க வீரர்கள் ரன் ஓடி கொண்டு இருந்தனர். பந்தை இழந்து விட்டதாக அறிவிக்குமாறு பந்துவீச்சாளர் நடுவரிடம் வலியுறுத்தி உள்ளார். பந்து அவர்கள் கண்ணுக்கு தெரிந்ததால் நடுவர்கள் மறுத்து விட்டனர்.

மரத்தில் சிக்கிய பந்தை பல வழிகளில் எடுக்க முயற்சித்துள்ளனர். கோடரி கொண்டு மரத்தை வெட்டுவது, துப்பாக்கியால் குறிவைத்து சுடுவது போன்ற முயற்சிகள் என்று கூறப்படுகிறது. இதற்கு மத்தியில் தொடக்க வீரர்கள் ரன் எடுத்து கொண்டே எடுத்துள்ளனர்.

ஒரு வழியாக பந்து மரத்தில் இருந்து கீழே விழுந்துள்ளது. அதனை யாரும் கேட்ச் செய்யவில்லை. ஆனால் அதற்குள் தொடக்க வீரர்கள் 286 ரன்களை ஓடியே எடுத்து விட்டனர்.

இறுதியாக விக்டோரியா அணி வெற்றி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த சுவாரஸ்ய நிகழ்வு இன்றும் நினைவு கூரப்படுகிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like