1. Home
  2. தமிழ்நாடு

கிரெடிட் கார்டுகளுக்கான வட்டி, தாமதக் கட்டணம் உயர்கிறது.. ஹச்.டி.எஃப்.சி வங்கி நடவடிக்கை !

கிரெடிட் கார்டுகளுக்கான வட்டி, தாமதக் கட்டணம் உயர்கிறது.. ஹச்.டி.எஃப்.சி வங்கி நடவடிக்கை !


ஹச்.டி.எஃப்.சி வங்கி கிரெடிட் கார்டுகளுக்கான தாமதக் கட்டணக் கட்டணத்தை உயர்த்தியது மட்டுமின்றி  சில கிரெடிட் கார்டுகளின் வட்டி விகிதத்தையும் உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஹச்.டி.எஃப்.சி வங்கியின்  கிரெடிட் கார்டுகான தாமதமாக செலுத்தும் கட்டணம் மற்றும் வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டு உள்ளன. இதனை 'ப்ளூம்பெர்க்' தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையின்படி, இந்தியாவின் மிகப்பெரிய அளவில் கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் கிரெடிட் கார்டுகளை வழங்கும் வங்கிகளும் இந்த நடவடிக்கையை பின்பற்ற நேரிடலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படுத்தப்பட்ட வகையில், இன்பினியா வரம்பைத் தவிர பிற கிரெடிட் கார்டுகளுக்கான தாமதக் கட்டணம் ரூ. 150-350 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

எச்.டி.எஃப்.சி வங்கியின் இணையதளத்தில் இருக்கும் கட்டணங்கள் குறித்த அறிக்கையின்படி, ஆகஸ்ட் 31 வரை ரூ.25,000 மற்றும் அதற்கு மேல் நிலுவைத் தொகையை வைத்துள்ள வாடிக்கையாளர்கரிடம் தாமதமாக செலுத்தியதற்காக ரூ.950 கட்டணம்  வசூலித்தது.

இருப்பினும் செப்டம்பர் 1 முதல் கிரெடிட் கார்டில் ரூ.25,000 முதல் 50,000 வரை இருப்பு வைத்திருந்தவர்கள் தாமத கட்டணமாக ரூ.1,100ம், ரூ .50,000க்கு மேல் இருப்பு வைத்திருந்தவர்கள் ரூ.1,300ம் கட்டணமாக  செலுத்துவார்கள் என்று அறிக்கை தெரிவிக்கிறது.

சில கிரெடிட் கார்டுகளில் 'ரிவால்வர் பேலன்ஸ்' மீதான வட்டி விகிதத்தை வங்கி மாதத்திற்கு 3.49 சதவீதத்திலிருந்து 3.6 சதவீதமாக உயர்த்தியுள்ளது என்றும் 'ப்ளூம்பெர்க்' தெரிவித்துள்ளது. 

newstm.in

Trending News

Latest News

You May Like