1. Home
  2. தமிழ்நாடு

லிவ்-இன் முறையில் விரிசல்.! ஆத்திரத்தில் நெஞ்சில் பலமுறை குத்தி கொன்ற காதலி..!

1

பெங்களூரு பகுதியைச் சேர்ந்தவர் ரேணுகா (எ) ஷீலா (34). அதே பகுதியில் கேரள மாநிலம் கண்ணூர் பகுதியைச் சேர்ந்த ஜாவத் (24) என்பவர் செல்போன் பழுது பார்க்கும் கடையில் வேலை பார்த்து வந்தார். இந்த சூழலில் ரேணுகாவும் ஜாவத்துக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. முதலில் பப்பில் சந்தித்த இவர்களது நட்பு பழக்கம் காதலில் முடிந்துள்ளது.

ரேணுகா தனியாக வாடகை வீட்டில் தங்கி வந்த நிலையில், இருவரும் ஒன்றாக வாழ எண்ணியுள்ளனர். அதன்படி பெங்களூருவில் உள்ள அக்ஷயா நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருவரும் ஒரே வீட்டில் லிவ்-இன் உறவில் இருந்து வந்துள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இருவரும் நன்றாக இருந்து வந்த நிலையில், கடந்த சில மாதமாக இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு வந்துள்ளார்.

Murder

இந்த நேரத்தில் ஜாவத் வேறு ஒரு பெண்ணுடன் பழகி வந்துள்ளார். ஜாவத் வேறொரு பெண்ணுடன் பழகுவதை அறிந்த ரேணுகா அவரிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் மேலும் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அப்படி தான் சம்பவத்தன்றும் ஜாவத்தின் பெண் தோழியால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

அப்போது ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தில் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற ரேணுகா, அருகில் இருந்த கத்தியை எடுத்து ஜாவத்தின் நெஞ்சு பகுதியில் குத்தியுள்ளார். தொடர்ந்து ஆத்திரம் அடங்காமல் குத்திக்கொண்டே இருந்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த ஜாவத், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து தான் செய்ததை உணர்ந்த காதலி ரேணுகா, தனது காதலன் ஜாவத்தின் உடலை தன்னுடைய மடியில் வைத்து கதறி கதறி அழுதுள்ளார்.

women-arrest

இந்த சம்பவம் அக்கம் பக்கத்தினருக்கு தெரியவரவே அவர்கள் இதுகுறித்து போலீசாருக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ், ஜாவத்தின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே பரிசோதித்த மருத்துவர்கள் ஜாவத் ஏற்கனவே, உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனிடையே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், குற்றவாளி ரேணுகாவை கத்தியோடு கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. வேறு ஒரு பெண்ணுடன் பேசியதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், தனது காதலனை கத்தியால் குத்தி கொன்ற காதலியின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like