1. Home
  2. தமிழ்நாடு

பாஜக வேல் யாத்திரை நடத்தினால்... கலவரம் வெடிக்கும்! சிபிஎம் பாலகிருஷ்ணன் கொந்தளிப்பு!

பாஜக வேல் யாத்திரை நடத்தினால்... கலவரம் வெடிக்கும்! சிபிஎம் பாலகிருஷ்ணன் கொந்தளிப்பு!


தமிழகத்தில் அரசியல் நோக்கத்திற்காக நடத்தப்படும் 'வேல் யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதிக்கவேண்டும் என சிபிஎம் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் என கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில், "வேல் யாத்திரை" என்கிற பெயரில் பாஜக கலவரத்திற்கு திட்டமிட்டிருக்கிறது. தங்கள் கலவர அரசியலை மறைத்து மக்களை ஏமாற்றவே 'வேல் யாத்திரை' என பெயரிட்டு இருக்கிறார்கள் என்றும்,

பாஜக நாடு முழுவதும் நடத்தியிருக்கும் யாத்திரைகளைத் தொடர்ச்சியாக கவனித்து வரும் எவருக்கும் அவர்களின் நோக்கம் பளிச்சென்று விளங்கும். இந்தியா முழுமைக்கும் அவர்கள் யாத்திரை நடத்துகிற போது வழி நெடுக நடந்த கலவர சம்பவங்கள் அனைவரும் அறிவர் என தெரிவித்துள்ளார்.

பாஜக வேல் யாத்திரை நடத்தினால்... கலவரம் வெடிக்கும்! சிபிஎம் பாலகிருஷ்ணன் கொந்தளிப்பு!

மேலும், கொரோனா காலத்தில் 100 பேருக்கு மேல் ஓரிடத்தில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழகத்தின் வட மூலையிலிருந்து தென் மூலை வரை கட்டுப்பாடுகள் இருக்கும் இந்தக் காலத்தில் யாத்திரை நடத்த அனுமதிப்பது அவர்களின் விஷம் கலந்த பிரச்சாரத்தை பரப்புவதோடு கொடிய நோயையும் பரப்புவதற்கு ஏதுவாக அமைந்துவிடும் என்றும்,

எனவே, நோய்ப் பேரிடர் காலத்தின் கட்டுப்பாடுகளை மீறி, கலவர அரசியல் நோக்கத்திற்காக நடத்தப்படும் இந்த 'வேல் யாத்திரைக்கு' தடைவிதிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது என்று தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like