மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதி..!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சளி மற்றும் தொண்டை வலி காரணமாகச் சென்னை ராஜீவ் காந்தி அரக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனுக்கு இன்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவர், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனுக்கு சளி மற்றும் தொண்டையில் வலி ஏற்பட்டதாகவும், இதனால் அதற்குச் சிகிச்சை பெற மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளன.