1. Home
  2. தமிழ்நாடு

மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் வெற்றி..!

1

மதுரை மக்களவைத் தொகுதியில் மொத்தம் 21 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளரும் தற்போதைய எம்.பியுமான சு.வெங்கடேசன், அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன், பாஜக வேட்பாளர் ராம.சீனிவாசன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யாதேவி ஆகியோருக்கு இடையேதான் போட்டி உள்ளது.

மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு அவரது கட்சியினர் மட்டுமில்லாது அமைச்சர்கள் பி.மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் கடுமையாக தேர்தல் பணி ஆற்றினர். காங்கிரஸ், மதிமுக, விசிக கட்சியினரும் சுற்றிச் சுழன்று சு.வெங்கடேசனுக்காக பணியாற்றினர்.

இந்நிலையில், திமுக கூட்டணி சார்பாக மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் 3,61,287 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் ராம.சீனிவாசன் 1,84,751 வாக்கு பெற்று 2-ம் இடத்தையும், அதிமுகவின் சரவணன் 1,70,582 வாக்குகள் பெற்று 3-ம் இடத்தையும் பெற்றுள்ளனர். சு.வெங்கடேசன் 2-வது முறையாக மதுரை தொகுதியிலிருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like