புதுச்சேரி ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு!
தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் ஆளுநராக பதவி வகித்து வந்தவர் தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன். நாடாளுமன்ற தேர்தல் வருகையையொட்டி மற்றும் தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் மக்களவை தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் தமிழிசை சௌந்தரராஜன், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழியை எதிர்த்து தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இந்த நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் ஆளுநராக உள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தெலுங்கனா மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் ஆளுநராக பதவி வகித்த தமிழிசை சௌந்தரராஜன் பதவி விலகியதையடுத்து, ஜார்கண்ட மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பை வழங்கி ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்