1. Home
  2. தமிழ்நாடு

COVID BREAKING : தமிழகத்திற்கு மத்திய அரசு உத்தரவு ..!!

COVID BREAKING : தமிழகத்திற்கு மத்திய அரசு உத்தரவு ..!!

தமிழ்நாடு, கேரளா , கர்நாடகா, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்று அதிகரித்தாலும் அதற்கான முறையான பரிசோதனைகள் ஏதும் நடக்கவில்லை என்று மத்திய சுகாதாரத் துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரிசோதனையின் எண்ணிக்கை ஒப்பிட்டளவில் திருப்திகரமாக இல்லை என்றும் கொரோனா பாதிப்புள்ளவர்களுக்கு சுவாசப்பிரச்சனை அதிகம் உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்தள்ளது.

இன்று ஒரு நாள் மட்டுமே கொரோனா பாதிப்பு 1500-ஐ தாண்டியது, இதனால் மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதார துறை அமைச்சகம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. கொரோனா பாதிப்புள்ளவர்களுக்கு சுவாச பிரச்சனை அதிகம் உள்ளதாகவும் முடிந்த அளவிற்கு சீக்கிரம் அவர்கள் பரிசோதனையை மேற்கொள்ளுமாறும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாடு, கேரளா , கர்நாடகா, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் கொரோனா அதிகரிப்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் முடக்கிவிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News

Latest News

You May Like