கொதிக்கும் எண்ணெய் ஊற்றி மருமகள் கொலை.. மாமியாருக்கு நீதிமன்றம் அளித்த அதிரடி தண்டனை !!

மருமகள் மீது கொதிக்கும் எண்ணையை ஊற்றி கொலை செய்த மாமியாருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை மாம்பலம் பகுதியில் சாகுல் ஹமீது- ஷாகின்(25) தம்பதி வசித்து வந்தனர். இதில் ஷாகினுக்கும் அவரது மாமியார் தாஜ் நிஷாவுக்கும் குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ஹமீது எவ்வளவு சமாதானம் செய்தாலும் மீண்டும் மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அதேபோன்று, கடந்த 2014 நவம்பர் 26ஆம் தேதி ஷாகினுக்கும் அவரது மாமியாருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் ஷாகின் தூங்க சென்றுள்ளார். எனினும் ஆத்திரம் தீராத அவரது மாமியார் பழிவாங்க திட்டம்போட்டார். அப்போது, இரவில் தூக்கிக்கொண்டிருந்த ஷாகின் மீது மாமியார் தாஜ் நிஷா கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றியுள்ளார். இதில் வழியால் துடித்து படுகாயமடைந்த ஷாகின் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மாம்பலம் போலீசார் தாஜ் நிஷா மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். ஷாகினிடம் மருத்துவமனையில் மரணவாக்குமூலம் வாங்கப்பட்டது. இந்நிலையில், சிசிச்சை பலனளிக்காமல் 2014 டிசம்பர் 17ஆம் தேதி அவர் இறந்துள்ளார்.
தாஜ் நிஷாவை கைது செய்த போலீசார் அவர் மீது பதிவு செய்யப்பட்ட கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றினர். இந்த வழக்கு வழக்கு சென்னை அல்லிகுளம் மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி டி.எம்.முகமது பாருக் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதால் தாஜ் நிஷாவுக்கு ஆயுள் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
newstm.in