1. Home
  2. தமிழ்நாடு

குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு : ஐந்தருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி..!

1

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக குற்றால அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கடந்த 3 நாட்களாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஆர்ப்பரித்ததால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து நேற்றும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை முதல்  வெள்ளத்தின் சீற்றம் சற்று குறைந்துள்ளதால் ஐந்தருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

காலை முதல் குற்றாலம் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் விட்டு விட்டு சாரல் மழையுடன் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. தண்ணீரின் சீற்றம் குறையும் பட்சத்தில் பழைய குற்றாலம் மற்றும் மெயின் அருவிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுபவர் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Trending News

Latest News

You May Like