எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரரை கைது செய்ய இடைக்காலத் தடை..!
நில மோசாடி தொடர்பாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் உள்பட ஏழு பேர் மீது பதியப்பட்ட வழக்கில் சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரதுசகோதரர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பாகநேற்று நடைபெற்றது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன், முன்னாள் அமைச்சரான விஜயபாஸ்கர் கேரளாவில் கைது செய்யப்பட்டு விட்டதாகவும், பல கோடிரூபாய் மதிப்புள்ள நிலத்துக்கு ரூ.95 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்றார்.அதையடுத்து நீதிபதி, எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு முன்ஜாமீ்ன் கோரிய மனுவைதள்ளுபடி செய்தும், அவரது சகோதரர் சேகரை இந்த வழக்கில் கைது செய்ய இடைக்காலத் தடை விதித்தும், காவல்துறை விசாரணைக்கு அவர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நிபந்தனை விதித்தும் உத்தரவிட்டுள்ளார்.