1. Home
  2. தமிழ்நாடு

சவுக்கு சங்கருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்..!

Q

மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் மீதான விசாரணை நடைபெற்று வந்தது. மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜரானார். சவுக்கு சங்கருக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்ற வாளகம் முன்பு பெண்கள் காத்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் பலத்த பாதுகாப்புடன் சவுக்கு சங்கரை நீதிமன்றத்திற்குள் அழைத்து சென்றனர். தேனியில் கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சவுக்கு சங்கருக்கு மே 22 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு அளித்தனர். சங்கருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர் காவல்துறை அதிகாரிகள் பெண் காவலர்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக மேலும் கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். பெண் போலீஸ் குறித்து அவதூறாக பேசியதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் இன்று தேனியில் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் சவுக்கு சங்கரை மே 17 ம் தேதி வரை கோவை மத்திய சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சவுக்கு சங்கர் மீது தகாத வார்த்தையில் பேசுதல், பெண்கள் குறித்து அவதூறாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தகவல் தொழில்நுட்ப சட்டத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். இதுமட்டுமல்லாமல் சவுக்கு சங்கரை கைது செய்த போது அவருடன் இருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் காரில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதனையடுத்து அவர் மீது கஞ்சா வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் விசாரணைக்காக மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சவுக்கு சங்கரை போலீசார் ஆஜர்படுத்தினார்கள். அவருக்கு 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு அளித்துள்ளனர். மே 22 வரை நீதிமன்ற காவலில் இருக்க வேண்டும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Trending News

Latest News

You May Like