1. Home
  2. தமிழ்நாடு

மன்னர் பெயரை குழந்தைக்கு வைக்க முயன்ற ஒரு தம்பதிக்கு கோர்ட் தடாலடி உத்தரவு!

1

முற்கால எகிப்தை 30 ஆண்டுகளாக ஆண்டு வந்தவர் தான் பையே (Piye-a). எகிப்து வரலாற்றில் இவருக்கு தனி இடம் உண்டு என்றே சொல்லலாம். இவரது பெயரை தனது குழந்தைக்கு வைக்க பிரேசில் தம்பதி கேடரினா, டானில்லோ ப்ரிமோலா தான் விரும்பினர். இந்த பெயர் வைக்க சம்பந்தப்பட்ட நகர நிர்வாகம் அனுமதி மறுத்தது. தம்பதி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். விசாரித்த பிரேசில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு:

மன்னர் பெயரை வைத்தால், எதிர்காலத்தில் பிரச்னை வரும். வழக்கத்திற்கு மாறான பெயர் காரணமாக, அந்த குழந்தை தன் வாழ்நாளில் கேலிக்கு ஆளாக நேரிடும். எனவே குறிப்பிட்ட அந்தப் பெயரை வைக்க முடிவை பெற்றோர் கைவிட வேண்டும்.

குறிப்பிட்ட அந்த பெயர், போர்ச்சுக்கீசிய மொழியில் வேறு ஒரு அர்த்தம் கொண்டது. பாலே நடனத்தின் ஒரு குறிப்பிட்ட வடிவத்துக்கு அந்த வார்த்தையை குறிப்பிடுவர். இதனால் எதிர்காலத்தில் குழந்தை, கேலி, அவமானத்துக்கு ஆளாக நேரிடும். எனவே இந்தப் பெயரை குழந்தைக்கு சூட்டக்கூடாது.இவ்வாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.


குழந்தையின் தாய் டானில்லோ ப்ரிமோலா கூறியதாவது: ஆப்ரிக்க வம்சாவளியினருடன் தொடர்பை பேணுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நோக்கத்துடன் பையேவின் நினைவாக எங்கள் மகனுக்கு பெயரிட முடிவு செய்தோம்.

ஆப்பிரிக்க பெயர்களை மீட்டெடுப்பது கறுப்பின மக்களின் வரலாற்றில் ஒரு புதிய தொடக்கமாக அமையும். இவ்வாறு அவர் கூறினார். குழந்தை எதிர்காலத்தில் எதிர்கொள்ள நேரிடும் பிரச்னையை தம்பதிக்கு நீதிபதிகள் விளக்கி கூறினர்.

Trending News

Latest News

You May Like