1. Home
  2. தமிழ்நாடு

உடனே “கூப்பன்”? ரீ-ஃபண்ட் பாலிசியை மாத்துங்க! ஓலா நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவு..!

1

டாக்ஸி புக்கிங் சேவை நிறுவனமான ஓலாவுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. வாடிக்கையாளர் தங்கள் பணத்தைத் திரும்பப் பெறும்போது நேரடியாக தங்கள் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட வேண்டுமா அல்லது கூப்பன் வழியாக ரீ ஃபண்ட் பெற வேண்டுமா என்பதை தேர்வு செய்ய அனுமதிக்கும் வழிமுறையை செயல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ஓலா தளத்தின் மூலம் முன்பதிவு செய்யப்பட்ட அனைத்து ஆட்டோ சவாரிகளுக்கும் நுகர்வோருக்கு பில் அல்லது ரசீது அல்லது இன்வாய்ஸ் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஓலா ஆப்பில் அட்வான்ஸாக செலுத்திய பணத்தை, ஒருவேளை சவாரியை கேன்சல் செய்து திரும்பப் பெறும்போது, கூப்பன் வவுச்சரை மட்டுமே ஓலா நிறுவனம் வழங்கி வந்தது. இது வங்கிக் கணக்கு மூலம் பணத்தைத் திரும்பப் பெறுதல் அல்லது கூப்பனைத் தேர்வு செய்தல் என நுகர்வோருக்கு தெளிவான ஆப்ஷன்களை வழங்கவில்லை. கூப்பன்களை அடுத்த சவாரிக்கு பயன்படுத்தலாம் என்றாலும் இது நுகர்வோர் உரிமைகளை மீறுவதாகும் என்று நிதி கரை தலைமையிலான மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் குறிப்பட்டுள்ளது.

மேலும், ஓலாவில் முன்பதிவு செய்யப்பட்ட ஆட்டோ சவாரிகளுக்கான கட்டணப் பட்டியலை வாடிக்கையாளர்கள் அணுக முயற்சித்தால், "ஓலாவின் ஆட்டோ சேவை நிபந்தனைகளில் மாற்றங்கள் காரணமாக ஆட்டோ பயணங்களுக்கான வாடிக்கையாளர் கட்டணப்பட்டியல் வழங்கப்படாது" என்ற தகவல் செயலியில் காட்டப்படுகிறது. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், விற்கப்பட்ட பொருட்கள் அல்லது சேவைகளுக்கான பில் அல்லது விலை விவரப் பட்டியல் அல்லது ரசீது வழங்காமல் இருப்பது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019-ன் கீழ் 'நியாயமற்ற வர்த்தக நடைமுறை' என்று கூறப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like