போதை ஜோடி கைது - 5 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு..!
சென்னை கடற்கரை சாலையில், நள்ளிரவில் காரை நிறுத்திய ஒரு ஜோடியிடம், காரை அங்கிருந்து எடுக்குமாறு கூறியுள்ளனர் ரோந்து போலீசார்.
அப்போது மதுபோதையில் இருந்த அந்த ஜோடி, காவல்துறையினரை இழிவாக பேசி ‘உதயநிதியை கூப்பிடுவா’ எனக்கேட்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த ஜோடி குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை மெரினாவில் காவலர்களை ஆபாசமாக பேசி மிரட்டிய ஜோடி மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.பணி செய்யவிடாமல் தடுத்து ஆபாசமாக பேசியதாக காவலர் சிலம்பரசன் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் சந்திரமோகன் மீது ஆபாசமாக திட்டுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல், சட்டவிரோதமாக தடுத்தல் உட்பட 5 பிரிவுகளின் கீழ் மயிலாப்பூர் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சந்திரமோகனுடன் இருந்த அவரது தோழி தனலட்சுமியையும் போலீசார் பிடித்து விசாரணை அந்தாதி வருகின்றனர்.