1. Home
  2. தமிழ்நாடு

இனி நாட்டு பசுமாடுகளை 'ராஜமாதா'வாக கருதப்படும்..! மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு..!

1

ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிரா அரசு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில், வேதகால நாகரிகத்தில் இருந்தே, இந்திய கலாசாரத்தில் பசுக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அவை தெய்வமாகவும் கருதப்படுகிறது.

மாட்டு சாணத்தை விவசாயத்தில் பயன்படுத்துவதன் மூலம், நமது பிரதான உணவில் அதிக ஊட்டச்சத்து பெற முடியும். சமூக-பொருளாதார காரணிகளுடன் மத மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு பசுக்கள் ராஜமாதாவாக அறிவிக்கப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நாட்டுப்பசுக்கள் தரும் பால், மனிதனின் ஆரோக்கியத்திற்கும், சிறுநீர் ஆயுர்வேத மருத்துவத்திற்கும், பஞ்சகவ்யம், இயற்கை விவசாய முறைக்கும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு நாட்டு மாடுகளுக்கு, மாநில தாய்ப்பசு அந்தஸ்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், ''நாட்டு மாடுகள், விவசாயிகளுக்கு மிகப்பெரிய வரம் ஆக பார்க்கப்படுகின்றன. அதன் காரணமாகவே, அவைகளுக்கு மிகப்பெரிய மதிப்பளிப்பதற்காக, ராஜ்யமாதா கோமாதா என அந்தஸ்து அளிக்க முன்வந்துள்ளோம்,'' என்றார்.
 

Trending News

Latest News

You May Like