நெல்லையில் பூட்டை உடைத்து வாக்கு எண்ணிக்கை..!
திருநெல்வேலி மக்களவைத் தொகுதியின் வாக்குப் பெட்டிகள் அம்பாசமுத்திரம் தொகுதியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்ட 'ஸ்ட்ராங் ரூம்' சாவி தொலைந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து வாக்கு எண்ணும் பணிக்கு தாமதம் ஆகி வந்ததால், அங்கிருந்த அரசியல் கட்சி முகவர்கள், அதிகாரிகளிடம் நேரம் கடந்து கொண்டே இருக்கிறது.அதைத் தொடர்ந்து அங்கு வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் பூட்டு உடைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அரசியல் கட்சிகளின் முகவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இதன் காரணமாக அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.இதைத் தொடர்ந்து வாக்குப் பெட்டிகள் வெளியே எடுக்கப்பட்டு வாக்கு எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.