இந்தியாவில் கொரோனா பலி குறைவதற்கு இதான் காரணமா ?

இந்தியாவில் கொரோனா பலி குறைவதற்கு இதான் காரணமா ?

இந்தியாவில் கொரோனா பலி குறைவதற்கு இதான் காரணமா ?
X

கொரோனா வைரஸ் 206 நாடுகளுக்கு மேல் பரவி பாதிப்பு எண்ணிக்கையும் , பலி எண்ணிக்கையும் அதிகமாகி உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 17 ஆயிரத்திற்கும் மேல் உள்ளது. பலி எண்ணிக்கையில் மற்ற நாடுகளை விட மிகக் குறைவாகவே உள்ளது.

சில வாரங்களுக்கு முன்னாள் அமெரிக்க அதிபர் இந்தியப் பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு ஹைட்ராக்ஸிக்ளோரோக்யுன் மருந்து கேட்டிருந்தார். அது குறித்து அமெரிக்க செய்தியாளர்களிடம் பேசும் போது, ஆசிய நாடுகளில் மலேரியா மருந்து அதிகளவில் உபயோகிக்கப்படுகிறது,

அதுவும் அங்கே பலி எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு காரணமாக இருக்கலாமோ என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள் என்று தெரிவித்து இருந்தார். தற்போது பிசிஜி என்ற (BCG) என்ற காச நோய்க்கான தடுப்பு மருந்து, கொரோனாவிலிருந்து இந்திய மக்களை காப்பாற்றுகிறதோ என்ற கோணத்தில் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். பிசிஜி – காசநோய் தடுப்பு மருந்து மேலை நாடுகளில் உபயோகிக்கப்படுவதில்லை.

இந்தியாவில் இந்த தடுப்பூசி கட்டாயமாக போடப்படுகிறது. இது நோய் தீவிரம் குறைவாக இருப்பதற்கு காரணமா என்று தெரியவில்லை. அமெரிக்கா, இத்தாலி, ஹாலந்து போன்ற நாடுகளில் பிசிஜி கிடையாது என்று பெங்களூருவில் பணியாற்றிவரும் கார்டியாலஜிஸ்ட் டாக்டர். விக்ராந்த் வீரண்ணா கூறியுள்ளார். இந்திய அமெரிக்க புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர்.ஆசிஷ் காமத், ஹூஸ்டன் எம்.டி ஆண்டர்சன் புற்றுநோய் மையத்தில் Urologic Oncology (Surgery) பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவர் இணைந்து எழுதிய ஆய்வு ஒன்றில் பிசிஜி தடுப்பு மருந்து கொடுக்கப்படாத நாடுகளில் கொரோனாவினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் பத்து மடங்கு அதிகமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. பிசிஜி தடுப்பு மருந்து கொடுக்கப்படும்  நாடுகளில் கொரோனா உயிரிழப்புகள் குறைவாக இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. 178 நாடுகளிலிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்கள் அடிப்படையில் இந்த ஆய்வு தகவல்கள் வெளிவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால் பிசிஜி தடுப்பு மருந்தினால் கொரோனா பாதிப்பு ஏற்படாது என்ற தகவல் உண்மை இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் 2015ம் ஆண்டு வரை பிசிஜி தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டும் இந்த அறிக்கை, பிசிஜி தடுப்பு மருந்தால் கொரோனா உயிரிழப்பு ஏற்படாது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. தற்போது கொரோனாவுக்கு எந்த தடுப்பு மருந்தும், குணமாக்கும் மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது தான் உண்மை என்று விளக்கம் அளித்துள்ளார்கள்.

இந்தியாவில் கொரோனா சோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு என்பது குறிப்பிடத் தக்கது. அதிக அளவில் சோதனை செய்யப்படும் போது தான் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிக அளவில் தெரியவரும். ஏராளமான பேருக்கு எந்த அறிகுறியும் தெரியாமலே, கொரோனா தொற்று ஏற்பட்டு மற்றவர்களுக்கு பரப்பிக் கொண்டு இருப்பார்கள்.

அமெரிக்காவில் தான் உலகத்திலேயே மிக அதிகமான எண்ணிக்கையில் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் 7.5 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இந்தியாவில் குறிப்பிட்ட சிலர், கொரோனா கோ கொரோனா என்று தீப்பந்தம் ஏந்தி கொரோனாவை விரட்டியடிக்க முயன்றுள்ளார்கள்.

135 கோடி கொண்ட மக்கள் நெருக்கமாக வசிக்கும் நம் நாட்டில் கொரோனா தொற்றுவினால், அமெரிக்கா போல் பாதிப்பும் உயிரிழப்பும் ஏற்படாமல் இருக்க வேண்டும். சமூக விலகியிருத்தல் மட்டுமே கொரோனாவை ஒழிப்பதற்கு நம் முன்னே உள்ள ஒரே ஆயுதம். உடலால் விலகி இருப்போம், உள்ளத்தால் இணைந்திருப்போம், கொரோனா தொற்றை ஒழிப்போம்.

Newstm.in

Next Story
Share it