ஒரே நாளில் ரூ.1 கோடிக்கு பருத்தி அமோக விற்பனை!!
ஒரே நாளில் ரூ.1 கோடிக்கு பருத்தி அமோக விற்பனை!!
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வெள்ளிக்கிழமை ரூ.1 கோடிக்கு பருத்தி விற்பனை நடைபெற்றுள்ளது.
வார வாரம் நடக்கும் இந்த ஏலத்திற்கு இந்த வாரம் திருச்சி, கரூர், திண்டுக்கல், கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 544 விவசாயிகள் தங்களுடைய 6,997 பருத்தி மூட்டைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனர்.
பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 30 வணிகர்களும் வந்திருந்தனர். 2,208 குவிண்டால் வரத்து இருந்ததாக தெரிகிறது. விலை குவிண்டால் ரூ.4,200 முதல் ரூ.5,316 வரை விற்பனையாகியுள்ளது.
சராசரி விலை ரூ. 4,800. திருப்பூர் விற்பனைக்குழு முதன்மைச் செயலாளர் ஆர்.பாலச்சந்திரன் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.
Next Story