இந்தியாவில் எங்கும் இல்லாத வகையில் தமிழகத்தில் ஊழல் அதிகமாகியுள்ளது - அண்ணாமலை..!

இலங்கைப் பயணத்தை முடித்துக் கொண்டு திருச்சி திரும்பிய நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை,"அமைச்சர் எ.வ.வேலு தொடர்பான இடங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டு வருவது குறித்து தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியதாவது: தவறு செய்தததால் புகாரின் அடிப்படையில் வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது. இந்தியாவில் எங்கும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் ஊழல் அதிகமாகியுள்ளது. அமைச்சர்களுக்கு சொந்தமான மருத்துவக்கல்லூரிகளை முதல்வர் தொடர்ந்து திறந்து வைக்கிறார்.
திமுக அமைச்சர்கள் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி லஞ்சம் மூலமாக சொத்துகளை குவித்து வருகின்றனர். எந்தவித பின்புலமும் இல்லாமல் அரசியல்வாதி என்ற பெயரில் சம்பாதிக்கின்றனர். பா.ஜ.,வின் 10 ஆண்டுகால ஆட்சியில் தமிழகத்திற்கு என்ன செய்தார்கள் என்பதை எடுத்து சொல்லி அடுத்த 5 ஆண்டுகளுக்கும் வாய்ப்பளிக்க மக்களிடம் கேட்க போகிறோம். அதேபோல், 30 மாத திமுக ஆட்சியில் என்ன செய்தார்கள் என்றும் மக்கள் கேட்கின்றனர்.
பொது இடத்தில் ஏற்கனவே இருந்த கொடிக்கம்பத்தில் கொடி ஏற்றினால் கூட கைது செய்கின்றனர். தமிழகத்தில் பேசுவதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கும் போது கொடிக்கம்பத்தை பற்றிதான் திமுக பேசுகிறது. அந்தளவிற்கு பா.ஜ.,வை பார்த்து திமுக பயப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.