1. Home
  2. தமிழ்நாடு

Stress, Depression-ஐ வைத்து காசு பார்க்கிறார்கள் கார்ப்பரேட் சாமியார்கள்..!

1

சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் சமூக நீதிக்கான உலகின் முதல் OTT தளமான “PERIYAR VISION – (Everything for everyone)” தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி, திமுக துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி, திரைப்பட நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த ஓடிடி தளத்தை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார். இதற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ பதிவு வாயிலாக வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகர் சத்யராஜ்,

“உலகம் முழுவதும் கார்பரேட் சாமியார்கள் Stress, Depression என்பதை வைத்து தான் காசு பார்க்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தலில் கோயம்புத்தூர் தொகுதி பற்றி தான் ஆர்வம் இருந்தது. வட மாநிலத்தவர்கள் கனிமொழி வெற்றி பெறக் கூடாது என்று தான் கவனித்தார்கள். கனிமொழி வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றால் ஆட்டி வைக்கிறார் என்பதால், அவர் வெற்றி பெறுவது பொய்யாக இருக்கக் கூடாதா என்று தான் நினைப்பார்கள்.

பராசக்தியில் வெட்டப்பட்ட வசனங்கள் அளவில்லாதவை. உதயசூரியன் பார்வையிலே விழித்துக் கொண்ட வேளையிலே என்ற வரிகளை அன்பே வா படத்தில் புதிய சூரியன் என்று மாற்றப்பட்டது. இதில் எல்லாம் திமுக வளர்ந்தது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி காலத்திலிருந்து இந்த திரைப்படத் தணிக்கை பிரச்னை இருந்து வருகிறது.

பெரியார் படத்தை டிஜிட்டலைஸ் செய்துள்ளார்கள் என்று சொன்னார்கள், ஆனால் அதனை இப்போது வெளியிட்டாலும் பரபரப்பாகும் என்ற பயம் உள்ளது. எங்களுக்கு எதிர்ப்பு இருந்தால் தான் நன்றாக இருக்கும். நாங்கள் எதிர்ப்பில் தான் வளருவோம். கருணாநிதியை விட தற்போதுள்ள முதலமைச்சர் மு க ஸ்டாலின் வேகமானவர்.

அமேசான், நெட்பிலிக்ஸ் போல ப்ளே ஸ்டோரில் இந்த ஓடிடி தளத்தை பதிவிறக்கம் செய்து, சப்ஸ்கிரைப் செய்து சந்தா கட்டணம் செலுத்தும் வகையில் உள்ளது. ஜூலை 31 வரை 2 ஆண்டுகள் சிறப்பு சலுகை சந்தா கட்டணம் செலுத்தும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதலில் குறும்படங்கள் வந்துள்ளன. இந்த சிந்தனையோடு ஆவணப் படங்களும் எடுக்கப்பட உள்ளன. 2000 வீடியோ பதிவுகள் வரை உள்ளன. ஆர்.பி.அமுதன் பெரியார் இயக்க சிந்தனைகளோடு ஆவணப் படங்களை வழங்கியுள்ளார்”

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like