1. Home
  2. தமிழ்நாடு

தி.மு.க எம்.எல்.ஏ ஆர்.டி அரசுக்கு கொரோனா பாதிப்பு !!

தி.மு.க எம்.எல்.ஏ ஆர்.டி அரசுக்கு கொரோனா பாதிப்பு !!


தமிழகத்தில் கொரோனா தொற்று தினமும் அதிகரித்து வருகிறது. கொரோனாவை தடுக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் கட்டுப்படுத்த முடியவில்லை.

கொரோனா தொற்று பாதிப்புக்கு திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ. அன்பழகன் பலியான நிலையில், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் பழனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தி.மு.க எம்.எல்.ஏ ஆர்.டி அரசுக்கு கொரோனா பாதிப்பு !!

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் அரசு-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் பொதுமக்கள் மட்டுமின்றி, சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள். தூய்மை பணியாளர்கள், காவலர்கள் என அனைத்து தரப்பினரையும் தொற்று பாதித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newstm.in

Trending News

Latest News

You May Like