சென்னையில் இந்த பகுதியில் மட்டும் கொரோனா பாதிப்பு அதிகம் !! நீங்க இந்த பகுதியா ?

சென்னையில் இந்த பகுதியில் மட்டும் கொரோனா பாதிப்பு அதிகம் !! நீங்க இந்த பகுதியா ?

சென்னையில் இந்த பகுதியில் மட்டும் கொரோனா பாதிப்பு அதிகம் !! நீங்க இந்த பகுதியா ?
X

ஊரடங்கு அமலில் உள்ள போதிலும் , சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 300 - யை நெருங்குவது சென்னை மக்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் 2 ம் கட்டமாக ஊரடங்கு அமலில் உள்ளது.

தமிழகத்திலும் ஊரடங்கு அமலில் இருந்தாலும் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. முக்கியமாக தலைநகர் சென்னையில் அதிகபட்சமாக கொரோனா பாதிப்புகள் உள்ளது. அதிகபட்சமாக ராயபுரத்தில் 91 கொரோனா பாதிப்புகள் உள்ளன. திருவிக நகரில் 38 பேரும், கோடம்பாக்கத்தில் 29 பேரும், அண்ணா நகரில் 26 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தண்டையார்பேட்டையில் 30 பேரும், தேனாம்பேட்டையில் 36 பேரும் கொரோனா சிகிச்சையில் இருக்கின்றனர். இந்த தகவலை சென்னை மாநகராட்சி மண்டல வாரியாக வெளியிட்டுள்ளது. தற்போது உள்ள நிலைமையில் யாரும் வெளியே வர வேண்டாம் என அரசு அறிவுறுத்தியும் பல பேர் வெளியே சுற்றுவதால் வரும் விளைவே , நாளுக்கு நாள் அதிகமாகும் இந்த கொரோனா பாதிப்பு , ஆகவே பொறுப்புடன் வீட்டிலேயே பாதுகாப்பாக இருப்போம். கொரோனாவை விரட்டுவோம்.

Newstm.in

Next Story
Share it