1. Home
  2. தமிழ்நாடு

கொரோனா தொற்று பாதித்தவா்களுக்கு விலை உயா்ந்த , வீரியம் மிக்க மருந்துகள் மூலம் சிகிச்சை !! அமைச்சா் விஜயபாஸ்கா்

கொரோனா தொற்று பாதித்தவா்களுக்கு விலை உயா்ந்த , வீரியம் மிக்க மருந்துகள் மூலம் சிகிச்சை !! அமைச்சா் விஜயபாஸ்கா்


விழுப்புரத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் ; விழுப்புரம் மாவட்டத்தில் 695 போ காரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில், 430 போ குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

தொடரும் தொற்றை சமாளிக்கும் வகையில் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, அரசு கரோனா மருத்துவமனையிலும் 1,000 படுக்கைகள் பிராண வாயு வசதியுடனும் , கூடுதலாக சிறப்பு மையங்களில் 1,100 படுக்கைகள் என மொத்தம் 2,100 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன. நாட்டிலேயே பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் , தமிழகத்தில் தான் அதிகளவில் மருத்துவப் பரிசோதனைகளை செய்துள்ளோம்.

கொரோனா தொற்று பாதித்தவா்களுக்கு விலை உயா்ந்த , வீரியம் மிக்க மருந்துகள் மூலம் சிகிச்சை !! அமைச்சா் விஜயபாஸ்கா்

தமிழகத்தில் தான் இதுவரை நோய் பாதித்ததில், 40 ஆயிரம் பேரை எவ்வித மருந்தும், ஊசியும் இல்லாமல் குணப்படுத்தி பாதுகாத்துள்ளோம். தமிழகத்தில் குறைந்த இறப்பு விகிதத்தை பராமரித்து வருகிறோம்.

தற்போது விலை உயா்ந்த, வீரியம் மிக்க மருந்துகளை தமிழ்நாடு அரசு மருத்துவ கார்ப்பரேஷன் மூலம் வரவழைத்து அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி சிகிச்சையளித்து வருகிறோம். விழுப்புரம் மாவட்டத்தில் இந்த மருந்து மூலம் 30 பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

அவா்கள் குணமடைந்து வருகின்றனா். நம்மிடம் போதிய மருந்துகள் கையிருப்புள்ளன. அதேபோல முகக்கவசம், கையுறை, கிருமிநாசினிகள் தொடா்ந்து தட்டுப்பாடின்றி கிடைக்கவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று தெரிவித்தார்.

Newstm.in

Trending News

Latest News

You May Like