1. Home
  2. தமிழ்நாடு

சென்னையில் இன்று காலை மட்டும் 26 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு !

சென்னையில் இன்று காலை மட்டும் 26 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு !


தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 

அந்த வகையில் இன்று ஒரே நாளில் காலை நேரத்தில் மட்டும் கொரோனாவுக்கு சென்னையில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதன்படி, ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 10 பேர், ஸ்டான்லி மருத்துவமனையில் 7 பேர், கேஎம்சியில் 4 பேர், ஓமந்தூரார் மருத்துவமனையில் 4 பேர், தனியார் மருத்துவமனையில் ஒருவர் என மொத்தம் 26 பேர் இன்று சென்னையில் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் இன்று காலை மட்டும் 26 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு !

சென்னையில் கொரோனாவுக்கு முன்கள பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர், காவல்துறையினர், சுகாதார பணியாளர்களும் உயிரிழக்கும் சோகம்  நீடிக்கிறது.

சென்னையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை உண்டாக்கியுள்ளது. 
 

newstm.in 

Trending News

Latest News

You May Like