1. Home
  2. தமிழ்நாடு

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி மனைவிக்கு கொரோனா பாதிப்பு  !! சொந்தமாக நடத்தி வந்த மருத்துவமனைக்கு சீல் !!

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி மனைவிக்கு கொரோனா பாதிப்பு  !! சொந்தமாக நடத்தி வந்த மருத்துவமனைக்கு சீல் !!


தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கோவையிலும் சீரான எண்ணிக்கையில் பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கோவையில் இன்று புதிதாக 33 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 3 நாள்களில் மட்டும் கோவையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 100-ஐ கடந்துவிட்டது. இந்நிலையில் கோவை குனியமுத்தூர் திருவள்ளுவர் நகர் பகுதியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிக்குச் சொந்தமான சங்கீதா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி மனைவிக்கு கொரோனா பாதிப்பு  !! சொந்தமாக நடத்தி வந்த மருத்துவமனைக்கு சீல் !!

அதில் அவரின் மனைவி தலைமை மருத்துவராக உள்ளார். இந்த நிலையில் அங்கு சிகிச்சை பெற்ற ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து, தலைமை பெண் மருத்துவர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார்.

அதில், அவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, அந்த மருத்துவமனை மற்றும் திருவள்ளுவர் நகர் தெருவுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

மேலும், அங்கு கிருமிநாசினிகள் தெளித்தனர். டாக்டர் கிருஷ்ணசாமியின் வீடு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் அவரது வீட்டின் முன்பு ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர். அதேபோல , அந்தப் பகுதியில் வசிக்கும் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளும் பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.

Newstm.in

Trending News

Latest News

You May Like