1. Home
  2. தமிழ்நாடு

திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரியும் 17 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு !! அச்சத்தில் பக்தர்கள்...

திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரியும் 17 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு !! அச்சத்தில் பக்தர்கள்...


திருமலை அன்னமய்ய பவனில் சனிக்கிழமை காலை அவசர அறங்காவலர் குழு கூட்டம் காணொலி காட்சி மூலம் நடத்தப்பட்டது. கூட்ட நிறைவுக்குப் பின் அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி கூறியதாவது.

திருமலை ஏழுமலையான் தரிசனம் கடந்த ஜூன் 8ம் தேதி முதல் தொடங்கப்பட்டது. தரிசனம் தொடங்கப்பட்டு 25 நாட்கள் முடிந்துள்ளது. திருமலைக்கு வந்து தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை.

திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரியும் 17 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு !! அச்சத்தில் பக்தர்கள்...

இந்நிலையில் திருமலையில் பணிபுரியும் மேளவாத்தியக்காரர்கள், பாதுகாப்பு ஊழியர்கள், அர்ச்சகர்கள் என 17 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. சோதிக்கப்பட்ட பக்தர்கள் மட்டுமே திருமலைக்கு அனுமதிக்கப்படுவதால், அவர்களுக்கு பக்தர்களிடமிருந்து தொற்று பரவும் வாய்ப்பில்லை.

அவர்கள் வசிக்கும் இடத்திலிருக்கும் தொடர்பால் தொற்று பரவியிருக்கிறது. அவர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் தரமான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை தினசரி 12 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையான தரிசித்து வருகிறார்கள். அவர்களின் எண்ணிக்கையை தற்போதும் உயர்த்தும் எண்ணம் தேவஸ்தானத்திற்கு இல்லை.

அதனால் திருமலையில் பணிபுரியும் ஊழியர்களின் சுழற்சி முறையை ஒரு வாரத்திலிருந்து 2 வாரங்களாக தேவஸ்தானம் உயர்த்தியுள்ளது. ஊழியர்கள் 2 வாரம் திருமலையில் தங்கியிருந்து பணிபுரிவர்.

மேலும் திருமலை தேவஸ்தானத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் கரோனா தொற்று பரிசோதனை நடத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. பக்தர்கள் ஏழுமலையான் தரிசனத்தில் தற்போது அனுமதிக்கப்பட்டு வருவதால், அவர்களின் வேண்டுகோளிற்கு இணங்க தேவஸ்தானம் ஆன்லைன் மூலம் கல்யாண உற்சவ சேவையை தொடங்க முடிவு செய்துள்ளது.

ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் பக்தர்களின் பெயர், நட்சத்திரம்,கோத்திரம் உள்ளிட்டவற்றை பெற்று சங்கல்பம் செய்து உற்சவம் திருமலையில் ஏகாந்தமாக நடத்தப்படும். கல்யாண உற்சவம் ஆன்லைன் டிக்கெட் பெற்றவர்களின் வீடுகளுக்கு கல்யாண உற்சவ பிரசாதம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

விரைவில் இது தொடங்கும் நாள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் அம்மாநில அனுமதியை முறையாக பெற்று பச்சை மண்டல பகுதிகளிலிருந்து மட்டுமே ஏழுமலையான் தரிசனத்திற்கு வர வேண்டும்.

திருமலைக்கு வரும் பக்தர்களும் சமூக இடைவெளியை கடைபிடித்து, முககவசம் அணிந்து, கிருமிநாசினி திரவங்களை பயன்படுத்தி சுத்தப்படுத்திக் கொண்டு ஏழுமலையானை பக்தியுடன் தரிசித்து செல்ல வேண்டும் என தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்படுகிறது'. இவ்வாறு அவர் கூறினார்

Newstm.in

Trending News

Latest News

You May Like