1. Home
  2. தமிழ்நாடு

கொரோனா பரவலுக்கு காரணமாகும் மார்க்கெட் !!

கொரோனா பரவலுக்கு காரணமாகும் மார்க்கெட் !!


கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் பொதுமக்கள் வெளியே வர அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. திருச்சியில் உள்ள காந்தி மார்க்கெட்டில் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாது என்பதால் அதை மூடிவிட்டு, திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையின் இரு புறமும், பழைய பால் பண்ணை முதல் செந்தண்ணீர்புரம் வரை யிலான சர்வீஸ் சாலையில் திறந்த வெளியில் தற்காலிகமாக காய்கறி மொத்த விற்பனை மார்க்கெட் மட்டும் செயல்பட மாவட்ட ஆட்சி யர் உத்தரவிட்டார்.

அதன்படி, கடந்த 20 நாட்களுக்கு மேலாக இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இங்கு வியாபாரிகள், சிறுவியாபாரிகளில் பெரும்பாலானோர் முகக்கவசம் அணிவதில்லை. மேலும், சமூக இடைவெளியைக் கடைபிடிக் காமல் கூட்டமாக நின்று காய்கறி களை வாங்குவதும், விற்பதுமாக இருக்கின்றனர். லாரிகளில் காய் கறிகளை இறக்கி ஏற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களும் சமூக இடைவெளியை கடை பிடிப்பதில்லை என்று மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

கொரோனா பரவலுக்கு காரணமாகும் மார்க்கெட் !!

பழைய பால்பண்ணை சந்திப்பில் பாதுகாப்புப் பணியில் உள்ள போலீஸார், மார்க்கெட்டுக்கு வருவோரிடம் சமூக இடை வெளியை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தியும் யாரும் அதை பின்பற்றுவதில்லை. மொத்த விற்பனை காய்கறி மார்க்கெட்டை திறந்தவெளிக்கு மாற்றியதே நெரிசல் ஏற்படக்கூடாது என்பதற் காகத்தான். ஆனால், அந்த நோக்கமே தற்போது சிதைந்து வருகிறது” என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Newstm.in

Trending News

Latest News

You May Like