#BREAKING தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 82,275ஆக அதிகரிப்பு!
இன்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 940 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து இதுவரையிலான பாதிப்பு 82,275ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் ஏற்படும் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் 133 பேர் உயிரிழந்த நிலையில், இந்த மாதத்தில் 28 நாளில் 919 பேர் பலியாகி உள்ளனர். ஒரே நாளில் 54 பேர் நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதுவரை பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 79ஆக உள்ளது. வேறு நோய் இல்லாத 8 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழப்பு விகிதம் ஒன்று புள்ளி மூன்று ஒன்று சதவீகமாக உள்ளது.
பாதிப்பை பொறுத்தவரை ஒரே நாளில் 3 ஆயிரத்து 940 பேர் நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதுவரையிலான பாதிப்பு 82 ஆயிரத்து 275ஆக அதிகரித்துள்ளது. கடந்த மாதம் 20 ஆயிரத்து 10 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த மாதம் இதுவரை 59 ஆயிரத்து 942 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் ஆயிரத்து 443 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 45 ஆயிரத்து 537 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ள நிலையில், குணமடைந்தோர் விகிதம் 55 புள்ளி மூன்று நான்கு சதவீதமாக இருக்கிறது. சென்னையில் கொரோனா பாதிப்பு 54 ஆயிரத்து நெருங்குகிறது. ஒரே நாளில் ஆயிரத்து 992 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 31 ஆயிரத்து 858 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 21 ஆயிரத்து 94 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 809 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலியானோர் விகிதம் ஒன்று புள்ளி ஐந்து சதவீதமாக உள்ளது.
newstm.in