1. Home
  2. தமிழ்நாடு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 67,000 - ஐ கடந்தது !! மொத்த பலி எண்ணிக்கை 866 ஆக அதிகரிப்பு !!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 67,000 - ஐ கடந்தது !! மொத்த பலி எண்ணிக்கை 866 ஆக அதிகரிப்பு !!


தமிழகத்தில் இன்று 2,865 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிகை 64,603லிருந்து 67,468ஆக அதிகரிப்பு. சென்னையில் இன்று 1654 பேர் கொரோனாவால் பாதிப்பு.

சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 44,138ல் இருந்து 45,814ஆக உயர்ந்தது. தமிழகத்தில் இன்று கொரோனாவால் 33 பேர் உயிரிழந்துள்ளனர் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 866 ஆக அதிகரிப்பு.

இன்று ஒரே நாளில் 2,424 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 37,763ஆக அதிகரிப்பு.தமிழகத்தில் இதுவரை 9,76,431 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

Newstm.in

Trending News

Latest News

You May Like