#BREAKING தமிழகத்தில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 367ஆக உயர்வு !

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 18 பேர் உயிரிழந்தனர்.
இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 367ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்று ஒரே நாளில் 1,982 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிகை 40,698 ஆக உயர்ந்துள்ளது.
newstm.in