1. Home
  2. தமிழ்நாடு

"ஜூன் 21ஆம் தேதிக்கு பிறகு கொரோனா முற்றிலும் அழியும்" : அணு விஞ்ஞானி கணிப்பு!

"ஜூன் 21ஆம் தேதிக்கு பிறகு கொரோனா முற்றிலும் அழியும்" : அணு விஞ்ஞானி கணிப்பு!


ஜூன் மாதம் 21ஆம் தேதி நிகழும் சூரிய கிரகணத்திற்கு பிறகு கொரோனா வைரஸ் முற்றிலும் செயல் இழக்கும் என சென்னையைச் சேர்ந்த அனுபவமிக்க அணு விஞ்ஞானி ஒருவர் கூறியுள்ளார். 

தான் பல நாடுகளில் அணு உலைகளை ஆய்வுசெய்து வருவதாக கூறியுள்ள அவர், செர்னோபில் உட்பட கிட்டத்தட்ட 750 அணு உலைகளில் பணி செய்த அனுபவம் தனக்கு உள்ளது என தெரிவித்துள்ளார். கொரோனா பற்றிய முக்கியமான செய்தி என்னவென்றால், பாதிக்கு மேற்பட்டோர் பயத்திலேயே பாதிப்புக்கு உள்ளாகின்றனர் என தெரிவித்துள்ளார். கொரோனா பூமியின் காற்று மண்டலத்தில் உலகமெங்கும் பெருகி வளரும் ஒரு வைரஸ், இது உலகளாவிய செயல்பாடு என கூறியுள்ள அவர், 2019 டிசம்பரில் பல கோள்கள் ஒரே நேர்கோட்டில் வந்தன, அதன் தாக்கம்தான் இது என்றும், அப்போது நாம் இது பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை, இது ஒருவிதமான நியூட்ரான்கள் மூலம் ஏற்படும் வைரஸ் என விஞ்ஞானி கூறியுள்ளார். 


எந்த மருந்தாலும் சரி செய்ய முடியாது என்றும், வரும் ஜூன் 21 அன்று சூரிய கிரகணம் ஏற்பட்டு அதனுடைய நிழல் பூமியின் மீது விழுந்து  பூமியை மறைக்கும் போது இந்த கொடிய வைரஸ் தானாகவே மறையக் கூடிய தன்மை வாய்ந்தது என்று அவர் கூறியுள்ளார். அந்த கிரகணம் முடிந்து பூமியின் மீது விழும் சூரியனின் புத்தொளி இந்த வைரசை செயலிழக்க வைக்கும் என தெரிவித்துள்ளார். இது ஒருபுறமிருக்க செப்டம்பர் 23ஆம் தேதி நிகழும் ராகு கேது பெயர்ச்சிக்கு பிறகு கொரோனா வைரஸ் தாக்கம் மட்டுப்படும் என்று ஜோதிடர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like