1. Home
  2. தமிழ்நாடு

சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!


சென்னையில் குறைந்திருந்த கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் ஏற்பட்ட போது சென்னையில்தான் பாதிப்பு மிக தீவிரமாக இருந்தது. ஏப்ரல் மாதத்தில் பரவல் தொடங்கியது. சென்னையில் ஜூன் 3ஆம் தேதி முதன்முதலாக தினசரி பாதிப்பு ஆயிரத்தை கடந்தது பதிவானது.

ஜூன் 26ஆம் தேதி அது 2 ஆயிரத்தை கடந்தது. வைரஸ் அசுர வேகத்தில் பரவி வந்த நிலையில், ஜூலை 4 முதல் 2 ஆயிரத்துக்கும் கீழ் தினசரி பாதிப்புவந்தது. ஆகஸ்ட் 5ஆம் தேதி ஆயிரத்துக்கும் கீழ் பாதிப்பு வந்ததால் மக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.

சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

அதன்பிறகு ஆயிரத்துக்கும் அதிகமானோர் தினந்தோறும் பாதிக்கப்பட்டாலும் கூட தொடர்ந்து 20 நாட்கள் ஆயிரத்தும் கீழ் பாதிப்பு பதிவானது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் தினமும் பாதிக்கப்படுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

சென்னையில் இதுவரை 1,72,773 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 1,57,216 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 12,283 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3,274 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like