1. Home
  2. தமிழ்நாடு

கொரோனா தடுப்பூசி சோதனை மீண்டும் தொடக்கம்!

கொரோனா தடுப்பூசி சோதனை மீண்டும் தொடக்கம்!


பரிசோதனையின் போது நோயாளிகளுக்கு ஏற்பட்ட பக்கவிளைவுகள் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி பரிசோதனை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் போட்டியில் உலக நாடுகள் மும்முரமாக இருக்கின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் தடுப்பூசி கண்டுபிடிப்பில் ஈடுபட்டுள்ளனரஷியா தனது ஸ்புட்னிக்-5 தடுப்பூசி தயாராகிவிட்டதாக கூறியுள்ளது.  அமெரிக்காவின் தேசிய சுகாதார அமைப்பும், மாடர்னா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள தடுப்பூசி இறுதிக்கட்ட சோதனையில் உள்ளது.

பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், இங்கிலாந்து அரசு, அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனம் ஆகியவை இணைந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளன. இந்த தடுப்பூசியை இந்தியாவில் தயாரிப்பதற்கு புனேயைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஒப்பந்தம் செய்து உள்ளது. இந்த தடுப்பூசிக்கு இந்தியாவில்கோவிஷீல்டுஎன்று பெயரிடப்பட்டு உள்ளது.

இந்த தடுப்பூசியின் இரண்டு கட்ட சோதனைகள் வெற்றிகரமாக முடிந்த நிலையில், மூன்றாம் கட்ட பரிசோதனை கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மருந்து செலுத்தப்பட்ட ஒருவருக்கு பக்கவிளைவு ஏற்பட்டதை அடுத்து பரிசோதனை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி பரிசோதனை இங்கிலாந்தில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதுஇங்கிலாந்து கமிட்டி விசாரணைகளை முடித்து, சோதனைகள் மீண்டும் தொடங்குவது பாதுகாப்பானது என்று பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

newstm.in

Trending News

Latest News

You May Like