கொரோனா தடுப்பு மருந்து !! மனிதர்கள் மீது சோதனை செய்ததில் வெற்றி !! பாதுகாப்பு அமைச்சகம்

கொரோனா தடுப்பு மருந்து !! மனிதர்கள் மீது சோதனை செய்ததில் வெற்றி !! பாதுகாப்பு அமைச்சகம்

கொரோனா தடுப்பு மருந்து !! மனிதர்கள் மீது சோதனை செய்ததில் வெற்றி !! பாதுகாப்பு அமைச்சகம்
X

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் இதுவரை 86 லட்சத்திற்கு மேற்பட்டோரைப் பாதித்துள்ளது. இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை 4.5 லட்சத்திற்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நூற்றாண்டின் மிக மோசமான தொற்று நோயாகப் பார்க்கப்படும் இந்த வைரஸுக்குத் தடுப்பு மருந்து கண்டறிய உலகம் முழுவதும் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த ஆராய்ச்சிகள் அனைத்தும் பல்வேறு கட்டங்களில் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஒரு கொரோனா தடுப்பூசி, மனிதர்களுக்குச் செலுத்தி சோதனை செய்யப்பட்டுள்ளது.

ரஷ்ய மருத்துவமனை ஒன்றில் 18 தன்னார்வலர்களுக்கு இந்த கொரோனா தடுப்பூசி முதல் முறையாகப் போடப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஊசி போடப்பட்ட நபர்கள் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பிலிருந்து வரும் நிலையில், இதுவரை அவர்களுக்கு எந்தவொரு பக்க விளைவோ, அல்லது உடல்நலக் கோளாறோ ஏற்படவில்லை என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Newstm.in

Next Story
Share it