1. Home
  2. தமிழ்நாடு

கொரோனா தடுப்பூசி : பீகாரில் மட்டும் தான் இலவசமா ? பாஜக-வை நோக்கி கேள்வி எழுப்பும் சிவசேனா !

கொரோனா தடுப்பூசி : பீகாரில் மட்டும் தான் இலவசமா ? பாஜக-வை நோக்கி கேள்வி எழுப்பும் சிவசேனா !


பீகார் மாநிலத்தில் மட்டும் கொரோனா தடுப்பூசி இலவசம் என்றால் பிற மாநில மக்கள் தடுப்பு மருந்து வாங்க பணம் செலுத்த வேண்டுமா என்பதை பாஜக தெளிவு படுத்தவேண்டும் என மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு வருடமும் மிகப்பெரிய அளவில் சிவாஜி பார்க்கில் திறந்த வெளியில் தசரா பேரணி நடைபெறும். இந்த வருடம் கொரோனா பெருந் தொற்றை கருத்தில் கொண்டு சிறிய அளவிலான பேரணி நடைபெற்றது.

மும்பை தாதர் பகுதியில் சிவசேனா கட்சியின் சார்பில் தசரா பேரணி நடைபெற்றது. அப்போது பேசிய சிவசேனா கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான உத்தவ் தாக்கரே, "மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா அரசு பொறுப்பேற்று ஒரு ஆண்டு நிறைவு பெற்றுவிட்டது. வெற்றிகரமாக இரண்டாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறோம்".

"நான் முதல்வராக பொறுப்பேற்றபோது, இந்த அரசு விரைவில் கவிழ்ந்து விடும் என பாஜக உள்ளிட்ட பல கட்சியினரும் கூறினார்கள். துணிவிருந்தால் எனது அரசை கவிழ்த்து பாருங்கள், அவர்களுக்கு நான் நேரிடையாகவே சவால் விடுக்கிறேன்" என எச்சரிக்கை விடுத்தார்.

மேலும், பீகார் மாநிலத்தில் வாழும் மக்களுக்கு மட்டும் கொரோனா தடுப்பூசி இலவசம் எனில் பிற மாநில மக்களின் நிலை என்ன என்பதை மத்தியில் ஆளும் பாஜக தெளிவு படுத்தவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Trending News

Latest News

You May Like