ஓரிரு மாதங்களில் 12 – 14 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி!?

12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு பிப்ரவரி கடைசி அல்லது மார்ச் மாதத்தில் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
நாட்டில் 100 கோடி தடுப்பூசி என்ற இலக்கு கடந்த ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி எட்டப்பட்டது. கடந்த 7ஆம் தேதி இது 150 கோடியைத் தொட்டது. பலமுறை ஒரு கோடிக்கும் அதிகமான டோஸ் ஒரேநாளில் செலுத்தப்பட்டுள்ளது.
தற்போது பூஸ்டர் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியும் தொடங்கிவிட்டது. அதன்கீழ் 43.19 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் 12 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டம் பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் மாதம் தொடங்குகிறது என்று கொரோனா நோய் தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் தலைவர் டாக்டர் என்.கே.அரோரா தெரிவித்துள்ளார்.
15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு இரண்டு டோஸ் செலுத்திய பிறகு இந்த திட்டம் தொடங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இளம் பருவத்தினருக்கு தடுப்பூசி போடுவது முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார்.
அவர்கள் பள்ளிகள், கல்லூரிகளுக்கு சென்று ஒன்றிணைந்து தொற்று நோயை பெறுவதற்கான அதிக ஆபத்தில் உள்ளனர் என்பதால் கொரோனா தடுப்பூசி செலுத்துவது அவசியம் என தெரிவித்துள்ளார்.
newstm.in