#BREAKING திமுகவை சேர்ந்த மேலும் ஒரு எம்எல்ஏவுக்கு கொரோனா!

கிருஷ்ணகிரி தொகுதி திமுக எம்எல்ஏ செங்குட்டுவனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
காய்ச்சல், சளி காரணமாக பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஏற்கனவே 13 எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் செங்குட்டுவனையும் சேர்த்து 14 எம்எல்ஏக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
newstm.in